Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய கூடிய வாய்ப்பு 

இலங்கையில் நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய கூடிய வாய்ப்பு 

3 பங்குனி 2024 ஞாயிறு 11:44 | பார்வைகள் : 3839


இலங்கையின் பல பகுதிகளில் இன்றைய தினம், மனித உடலில் உணரப்படக்கூடிய வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகளவில் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல்மாகாணம், வடமேல் மாகாணம், தென் மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இவ்வாறு வெப்பநிலை பதிவாகக்கூடும்.

அதிக வெப்பம் காரணமாக நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய கூடிய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

நீண்டநேர உடல் உழைப்பு காரணமாக இந்த நிலை ஏற்படலாமென சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக வெப்பத்தால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக தொடர்ந்தும் தண்ணீர் அருந்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுமக்கள் உண்ணும் உணவு மற்றும் பானங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, திரவ உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்