Paristamil Navigation Paristamil advert login

Poissy : தீ விபத்தில் இருவர் காயம்!

Poissy : தீ விபத்தில் இருவர் காயம்!

3 பங்குனி 2024 ஞாயிறு 10:42 | பார்வைகள் : 5111


நேற்று சனிக்கிழமை மாலை Poissy (Yvelines) நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். தீயில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள எட்டாவது தளத்தில் இருந்து கீழே குதித்துள்ளனர்.

இங்குள்ள 12 மாடிகள் கொண்ட தளம் ஒன்றின் எட்டாவது தளத்தில் இரவு 8 மணி அளவில் இத் தீவிபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் வசித்த இருவர் தங்களை காப்பாற்றிக்கொள்ள எட்டாவது தளத்தில் இருந்து குதித்துள்ளனர்.

அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு படையினர் விரைவாக செயற்பட்டு தீயை அணைக்க முற்பட்டனர். ஒருமணிநேர போராட்டத்தின் பின்னர் தீ அணைக்கப்பட்டது. அக்கட்டிடத்தில் வசித்த 60 பேர் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்