பனிப்பொழிவு! - ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
3 பங்குனி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 5668
இன்று ஞாயிற்றுக்கிழமை பனிப்பொழிவு காரணமாக நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மார்ச் 3 ஆம் திகதி காலை 6 மணி முதல் இந்த எச்சரிக்கை Loire, Ardèche, Haute-Loire, Lozère ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும், நண்பகல் முதல் Savoie மற்றும் Hautes-Alpes ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Auvergne-Rhône-Alpes மாவட்டத்தில் அதிகபட்சமாக 5 செ.மீ பனிப்பொழிவும், இரவு நேரத்தில் அதிகபட்சமாக 20 தொடக்கம் 40 செ.மீ வரை பனிப்பொழிவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.