Paristamil Navigation Paristamil advert login

வேறொரு துணையை மனிதர்கள் நாடிச் செல்வதற்கான காரணம் என்ன?

வேறொரு துணையை மனிதர்கள் நாடிச் செல்வதற்கான காரணம் என்ன?

2 பங்குனி 2024 சனி 12:05 | பார்வைகள் : 1244


கணவன், மனைவி இருவருமே ஒருவருக்கு ஒருவர் உண்மையாகவும், ஒற்றுமையாகவும் வாழ்நாளெல்லாம் இருப்பதுதான் மன நிறைவு கொண்ட திருமண வாழ்க்கை முறையாகும். எனினும் இடைப்பட்ட காலத்திலேயே திருமண வாழ்க்கை கசந்து, அதைக் கடந்த தவறான பந்தத்தை சிலர் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

திருமணம் கடந்த உறவுக்கு சமூக அங்கீகாரம் கிடையாது. மேலும் இத்தகைய பந்தத்தினால் குடும்ப அமைப்புகள் சிதைந்து சண்டை சச்சரவுகள் உண்டாகும். ஆனாலும் கூட இதை எல்லாம் தாண்டி திருமணம் கடந்த உறவுகளை சிலர் உருவாக்கிக் கொள்கின்றனர்.

வாழ்வையே தனக்காக அர்ப்பணித்துக் கொள்ளும் ஒரு கணவன் அல்லது மனைவியை பிடிக்காமல், வேறொரு துணையை மனிதர்கள் நாடிச் செல்வதற்கான காரணம் என்ன? இங்கே பார்க்கலாம்.

மனப்பூர்வமான பந்தத்தில் இடைவெளி : தம்பதியர் இருவரும் மனப்பூர்வமாக இணைந்து வாழ வேண்டும். ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தி, கருணை உள்ளம் கொண்டு தாம்பத்திய வாழ்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் இயந்திர வாழ்க்கை சூழல் காரணமாக தங்கள் வாழ்க்கைத் துணையிடம் இருந்து இதெல்லாம் கிடைக்காமல் போகும் சூழலில் மற்ற நபர்களிடம் இருந்து அதனை எதிர்பார்க்கத் தொடங்குகின்றனர்.

தாம்பத்திய உறவில் திருப்தியின்மை : திருமணம் நடந்து குழந்தைகளை பெற்றுக் கொண்ட பின்னர் ஆணுக்கு அல்லது பெண்ணுக்கு தாம்பத்திய வாழ்க்கையின் மீது பெரிய அளவுக்கு நாட்டம் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் தங்கள் துணையுடன் உடல் ரீதியான பந்தத்தை குறைத்துக் கொள்கின்றனர். இந்த இடைவெளியை வேறொரு துணை மூலமாக நிரப்பிக் கொள்ள சிலர் முனைந்து விடுகின்றனர். இயல்பான தாம்பத்திய வாழ்க்கை கடந்து குதூகலமான வாழ்க்கை முறையை விரும்புகின்ற சிலரும் திருமணம் கடந்த பந்தத்தை தேர்வு செய்கின்றனர்.

தேடி வரும் வாய்ப்புகள் : நாமே மிகுந்த மனக்கட்டுப்பாட்டுடன் நேர்மையாக வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் நம்மை அறியாமலேயே சில வாழ்க்கைச் சூழல் நம்மை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது. வேறொரு நபருடன் பழக்கம் ஏற்படுவதற்கான தவறான சூழல் அமைவது அல்லது செல்போன், சமூக வலைதள சாட்டிங் போன்றவற்றில் சாதாரணமாக பேச தொடங்கி அது தவறான பழக்கத்தில் முடிவது என்று மனக்கட்டுப்பாட்டை மீறிய செயல்களும் அரங்கேறுகின்றன.

சவால்களில் இருந்து நழுவுவது : எல்லா திருமண வாழ்க்கையும் 100% கச்சிதமாக அமைந்துவிடும் என்று கூறி விட முடியாது. ஒன்று இரண்டு சவால்கள் அல்லது பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதற்கு தீர்வு கண்டு முறையான வாழ்க்கையை தொடர்வதற்கு பதிலாக, சிலர் திருமணம் கடந்த பந்தத்தை தேர்வு செய்கின்றனர்.

சுய தேவைகள் : சிலர் தங்கள் வாழ்க்கை மிக மோசமானதாக இருப்பதாக கவலைப்படுகின்றனர். சிலர் தன்னம்பிக்கையை இழக்கின்றனர். அத்தகைய சூழலில் திருமணம் கடந்த பந்தத்தின் மூலமாக இதற்கெல்லாம் தீர்வு கிடைப்பதாக நம்புகின்றனர்.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்