Paristamil Navigation Paristamil advert login

புகைப்படத்தில் இருந்து வீடீயோவை உருவாக்க உதவும் AI கருவி- எப்படி மாற்றுவது?

புகைப்படத்தில் இருந்து வீடீயோவை உருவாக்க உதவும் AI கருவி- எப்படி மாற்றுவது?

2 பங்குனி 2024 சனி 09:00 | பார்வைகள் : 1871


நினைவுகளை நியாபகமாக எடுத்துவைத்துக்கொள்ளும் புகைப்படங்களை தத்ரூபமாக வீடியோக்களாக மாற்றலாம்.

அதற்கான தொழில்நுட்பங்கள் தற்போது ஏராளமாக வந்துவிட்டன.

தொழில்நுட்பங்களால் மூளைக்கு எட்டாத பல அதிசயங்களை நிகழ்த்தி காட்ட முடியும் என்பது AI கருவிகள் வந்த பிறகு நிரூபணமாகிவிட்டது.

அந்தவகையில், புகைப்படங்களை வீடியோவாக மாற்றிக் கொடுக்கும் தொழில்நுட்பம் ஒன்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.

எப்படி மாற்றுவது..? 

runwayml.com என்ற இணையத்தளம் புகைப்படத்திலிருந்து வீடியோவாக மாற்ற உதவும்.

முதலில் இந்த பக்கத்திற்கு சென்று உங்களுக்கு என உறுப்பினர் கணக்கு ஒன்றை உருவாக்கி கொள்ள வேண்டும்.

இதன்பிறகு, இணையத்தளத்தில் Image to Video என்று இருக்கும்.அதனை Click செய்யவும்.

அடுத்து Motion Brush ஆப்சனை Click செய்யுங்கள்.

இந்த ஆப்ஷனில் நீங்கள் வீடியோவாக மாற்ற விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.

எந்த மாதிரியான Design மற்றும் Color வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.

பிறகு Generate என்ற ஆப்சனை Click செய்யவும்.

சிறிது நேரம் கழித்து உங்கள் புகைப்படம் வீடியோவாக மாற்றி கொடுக்கப்படும்.     
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்