Paristamil Navigation Paristamil advert login

WhatsApp-ல் Profile Photo-வை பாதுகாக்க புதிய வசதி

WhatsApp-ல் Profile Photo-வை பாதுகாக்க புதிய வசதி

1 பங்குனி 2024 வெள்ளி 08:46 | பார்வைகள் : 1355


குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவும் WhatsApp செயலி அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கிறது.

இந்த செயலி Meta குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், தற்போது பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், Meta நிறுவனம் ஒரு வசதியை கொண்டு வரவுள்ளது. 

WhatsApp-ல் பயனர்களின் Profile புகைப்படத்தை Screenshot எடுப்பதை தடுப்பதற்கான புதிய வசதியை Meta கொண்டு வர உள்ளது.

ஏற்கனவே, விருப்பப்பட்ட பயனர்களுக்கு மட்டும் தங்களது Profile புகைப்படத்தை காண்பிக்குப்படியும், மற்றவர்களுக்கு Profile புகைப்படம் காண்பிக்கப்படாத வசதி இருக்கிறது.

இந்த நிலையில், WhatsApp-ல் பயனர்களின் Profile புகைப்படத்தை Screenshot எடுப்பதை தடுப்பதற்கான புதிய வசதியை Meta கொண்டு வர உள்ளது.  

இந்த வசதி பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, தங்கள் அனுமதியின்றி Profile புகைப்படத்தை எடுப்பதை தடுக்க உதவுகிறது.

ஏற்கனவே, இந்த வசதி Instagram, Google Pay, Paytm, Phone Pay உள்ளிட்ட App-களில் இருக்கும் நிலையில், தற்போது Meta நிறுவனம் WhatsApp-லும் கொண்டு வர உள்ளது.

இந்த வசதி முதலில் Android பயனர்களுக்கு கிடைக்கின்றன. மேலும், விரைவில் iPhone பயனர்களுக்கும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.              

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்