Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தொடரும் நெருக்கடி - ஏழு விமானங்கள் தாமதம்

இலங்கையில் தொடரும் நெருக்கடி - ஏழு விமானங்கள் தாமதம்

27 மாசி 2024 செவ்வாய் 16:43 | பார்வைகள் : 3675


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு புறப்படவிருந்த ஏழு விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று தாமதமாகியுள்ளதாக விமான தகவல் மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாமதமான  விமானங்களில் ஆறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் உள்ளடங்குவதாக அவர் கூறினார்.

அதன்படி, அதிகாலை 1.10 மணிக்கு இந்தியாவின் பெங்களூருக்கு செல்லவிருந்த யுஎஸ் 173 விமானமும், தாய்லாந்தின் பாங்கொக் நகருக்கு அதிகாலை 1.15 மணிக்கு புறப்படவிருந்த யுஎல் 402 விமானமும், சென்னை செல்லவிருந்த யுஎல் 135 இலங்கை விமானமும் இன்று காலை தாமதமானது  .

இதற்கிடையில், இந்தியாவின் சென்னைக்கு புறப்பட வேண்டிய SG 002 விமானமும் தாமதமானது .

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்