காஃபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
27 மாசி 2024 செவ்வாய் 15:38 | பார்வைகள் : 2599
காலையில் எழுந்ததும் காஃபி அருந்துவதை பலரும் சம்பிராதயமாக கடைபிடிக்கிறார்கள். அவர்களுக்கு காஃபி அருந்தினால் தான் அன்றைய நாளே தொடங்கியது போலிருக்கும். அதே சமயம் இந்த காஃபி, நமது மெடபாலிஸத்தை அதிகப்படுத்தி உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க காரணமாக இருப்பது உங்களுக்கு தெரியுமா?
இயற்கை ஊக்கியாக செயல்படும் கஃபைன்… காஃபியில் அதிகளவு கஃபைன் உள்ளது. இது இயற்கை ஊக்கியாக செயல்பட்டு மெடபாலிக் விகிதங்களை அதிகப்படுத்துகிறது. காஃபியில் உள்ள கஃபைன் மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டி, உடலில் அட்ரினைலின் அதிகமாக சுரக்க உதவுகிறது. இந்த ஹார்மோன் நம் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை உடைத்து ஃபேட்டி ஆசிடாக மாற்றுகிறது. இவையே நம் கலோரிகளை எரிக்க உதவியாக இருக்கிறது.
உடல் வெப்பநிலையை அதிகப்படுத்தும் காஃபி… காஃபி அருந்துவதால் நம் உடலின் வெப்பநிலை தற்காலிகமாக அதிகரிக்கிறது. இதற்கு காரணம் நம் உடலில் உள்ள BAT என்ற திசுக்கள். கொழுப்பு திசுக்கள் வகையைச் சேர்ந்த BAT, வெப்பத்தை அதிகப்படுத்தி கலோரிகளை எரிக்கிறது. உடலில் இந்த நடைமுறையை செயல்படுத்த காஃபி உதவுகிறது.
உடல் செயல்திறனை அதிகப்படுத்தும் காஃபி… உடற்பயிற்சியின் போது நம் செயல்திறனை அதிகரிக்க காஃபியில் உள்ள கஃபைன் உதவுகிறது. இது எப்படி என நீங்கள் கேட்கலாம்? கொழுப்பு திசுக்களிலிருந்து ஃபேட்டி ஆசிடுகளை திரட்டி தசை சுருக்கங்களை விரிவுபடுத்த கஃபைன் உதவுகிறது. இதன் விளைவாக உடல் வலிமை பெறுவதோடு கலோரிகளும் எரிக்கப்படுகிறது.
அதிக கலோரிகள் உடலில் சேர்வதை தடுக்கும் காஃபி… பசியை அடக்குவதில் சிறந்து விளங்குகிறது காஃபி. நமது மூளையில் உள்ள டோபமைன் மற்றும் செரோடோனின் போன்ற நரம்பியல் கடத்திகளை கஃபைன் பாதித்து நமது பசியையும் மனநிலையையும் ஒழுங்குப்படுத்துகிறது. இதனால்தான் காஃபி அருந்தியதும் வயிறு நிறைந்த திருப்தி கிடைப்பதோடு கூடுதலாக கலோரிகள் உட்கொள்வதையும் தடுக்கிறது.
லெப்டின் ஹார்மோனை ஒழுங்குபடுத்துகிறது : தினமும் காஃபி அருந்துவதால் நம் உடலின் ஆற்றல் சமநிலை மற்றும் மெடபாலிஸத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இன்சுலின், லெப்டின் போன்ற மெடபாலிக் ஹார்மோன்களில் மாறுதல்கள் உண்டாகின்றன. கஃபி அருந்துவதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதோடு டைப்-2 டயாபடீஸ் வரும் ஆபத்து குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
குடல் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும் காஃபி… காஃபி அருந்துவதால் குடல் ஆரோக்கியத்திலும் நுண்ணுயிர் பெருக்கத்திலும் நல்லவிதமான விளைவை உண்டாக்குகிறது. நமது மெடபாலிஸம் மற்றும் ஆற்றலை ஒழுங்குபடுத்துவதில் குடல் நுண்ணுயிர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காஃபியில் உள்ள க்ளோரோஜெனிக் ஆசிட் மற்றும் பாலிபீனால் போன்ற கலவைகள் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றன.
மெடபாலிஸம் அதிகரிக்க காஃபியை எப்படி அருந்த வேண்டும்? தினமும் 3-4 கப் மிதமான அளவில் காஃபி அருந்துங்கள். ஒருவேளை அதிகமான அளவு அருந்தினால் இதயத்துடிப்பு அதிகரிக்கும்; தூக்கம் பாதிக்கப்படும். இயற்கை முறையில் விளைந்த, நல்ல தரமான காஃபி பீன்ஸ்களை பயன்படுத்துங்கள். காஃபியில் பால், சர்க்கரை, க்ரீம்களை சேர்க்காமல் குடித்தால் மிகவும் சிறப்பு. தினமும் கஃபி அருந்துவதால் நம் அறிவாற்றல் செயல்பாடு மேம்படும்.
அதிகப்படியான காஃபி அருந்துவதால் வரும் பாதிப்புகள்: காஃபி அருந்துவதால் பல நன்மைகள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது நல் உடலில் பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் சொல்லியாக வேண்டும். அதிகப்படியான காஃபி அருந்துவதால் இதயத்துடிப்பு வேகமாகும், தூக்கம் பாதிக்கும், உடலில் இயற்கையான ரிதம் பாதிக்கப்படும். மேலும் வயிற்றுப் பிரச்சனை, வாய்வுத் தொல்லை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளும் வரக்கூடும்.