Aulnay-sous-Bois : மின்சார ஸ்கூட்டரில் பயணித்த ஒருவர் பலி!
27 மாசி 2024 செவ்வாய் 14:05 | பார்வைகள் : 5704
மின்சார ஸ்கூட்டர் (trottinette) ஒன்றில் பயணித்த ஒருவர் விபத்துக்குள்ளாகி பலியாகியுள்ளார்.
Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இரவு 10 மணி அளவில் boulevard André-Citroën பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த நபர் மகிழுந்து ஒன்றுடன் மோதுண்டுள்ளார். உடனடியாக மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டு அவர் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். ஆனால் இரவு 11.25 மணி அளவில் அவர் உயிரிழந்துள்ளார்.
மகிழுந்தைச் செலுத்திய சாரதி அதிர்ச்சியடைந்த நிலையில், அவர் Bondy நகரில் உள்ள Jean-Verdier மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மதுபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் மது அருந்தியிருக்கவில்லை என உறுதிசெய்யப்பட்டது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.