‘STR 48’ ப்ரோமோ வீடியோ? ரசிகர்களை ஏமாற்றிய சிம்பு!
27 மாசி 2024 செவ்வாய் 12:24 | பார்வைகள் : 2434
நேற்று சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் இந்த வீடியோ அவர் நடிக்க இருக்கும் ’எஸ்டிஆர் 48’ ’படத்தின் வீடியோ என்று அனைவராலும் பகிரப்பட்டது. ஆனால் தற்போது இது ஒரு விளம்பர படத்திற்கான வீடியோ என்று செய்திகள் வெளியான நிலையில் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் ’எஸ்டிஆர் 48’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் நேற்று சிம்பு திடீரென தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் பாகுபலி அளவுக்கு பிரமாண்டமாக இருந்ததை பார்த்து இந்த படம் நிச்சயம் 500 முதல் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்றும் பலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ காட்சிகள் சிம்பு நடித்த விளம்பரப்படுத்திற்காக எடுத்தது என்று கூறப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதேபோன்று ’எஸ்டிஆர் 48’ படத்திலும் காட்சிகள் இருக்க வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.