கணவன் - மனைவிக்குள் சண்டை வர காரணமாக இருப்பவையும், அதற்கான தீர்வும்
27 மாசி 2024 செவ்வாய் 11:47 | பார்வைகள் : 2791
எப்போதுமே கணவனும், மனைவியும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமெனவே ஒவ்வொரு முறையும் நினைப்பர். ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் சண்டைகள் நம் வாழ்வில் தொடர்கதை ஆகிவிடுகின்றன. எனினும், ஒரு சில விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ளும்போது, தேவையற்ற சண்டைகளை தவிர்க்கலாம். அவை என்னவென்பதை நாம் தொடர்ந்து பார்ப்போம்.
புரிதல் இல்லாமல் போதல்
சொல்ல வரும் விஷயத்தை குறித்த புரிதல் இல்லாமல் போகும்போது தம்பதியினருக்கு இடையே சண்டை வருகிறது. இருவருக்கும் இடையே வேறுபட்ட கருத்து காணப்படும். இதனால், யார் சொல்வதை யார் கேட்பது என்ற சண்டை வரலாம். இந்த மாதிரியான சூழலில், கணவர் என்பவர் மனைவி சொல்ல வருவதையும், மனைவி என்பவர் கணவர் சொல்ல வருவதையும் புரிந்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இருவருமே எதற்காக அந்த விஷயம் சொல்லப்படுகிறது என்பதை புரிந்துக்கொண்டாலே போதும். நிச்சயம், யாரோ ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வர்.
பொய் சொல்லுதல்
பொய் என்பது கொஞ்ச காலத்திற்கு உங்களை காப்பாற்றலாம். ஆனால், உண்மை தெரிய வரும்போது, அது மிகப்பெரிய விரிசலை தம்பதியினரின் உறவுக்கு இடையே ஏற்படுத்தலாம். ஒருசிலர் அடிக்கடி பொய் பேசுவர். இதனால், அப்போதைக்கு அவர்களால் சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியும். ஆனால், உண்மை தெரியும்போது, சமாளிக்கவே முடியாது. பொய் பேசியது எவ்வளவு பெரிய தவறு என்பதனை மனம் உணரும்.
எப்போதும் தம்பதியினர்கள் உண்மையை மட்டுமே பேசி வரும்போது, உறவு வலுவடையும். பொய் பேசுவதால், நம் மீதான நம்பிக்கை குறையவும் வாய்ப்புள்ளது.
சிறப்பை உணராமல் இருத்தல்
எப்போதுமே கணவன் - மனைவிக்குள் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அது பிறந்தநாள் அல்லது திருமண நாள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த மாதிரியான சூழலில் நாம் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரு சிலர் வேலைப்பளு காரணமாக இது போன்ற சிறந்த தருணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள், வாழ்த்து கூற மறந்தும் போய்விடுவார்கள்.
ஒரு சிறு நிகழ்வு கூட தம்பதியினருக்கு இடையே மோசமாக உணர வைக்கும். உடனே, முக்கியத்துவத்தை ஆராய தொடங்கிவிடுவோம். அதனால், நாம் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், இது போன்ற நாட்களை கொண்டாட மறக்காமல் இருப்பது நல்லது.
கவனம் செலுத்துதல்
தம்பதிகள் எப்போதுமே ஒருவருக்கொருவர் பேசுவதை கவனிக்க வேண்டும். நாம் அவ்வாறு கவனிப்பது, ‘நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன்.’ என்பதை வெளிப்படுத்தக்கூடிய விதமாகும். கவனிக்காமல் போகும்போது, ஒரு வித தனிமையை உணர நேரிடும். இதனால் சண்டை மற்றும் சச்சரவு உண்டாக வாய்ப்புள்ளது.
சந்தேகப்புத்தி
ஒரு சில சமயம் தம்பதியினர் இடையே சந்தேக புத்தி உண்டாகும். சந்தேகம் வந்துவிட்டால், அது மிகப்பெரிய பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.
இவை தம்பதியினருக்கு இடையே சண்டை வர சில சமயங்களில் காரணமாகிறது. இந்த தலைப்பு குறித்து நீங்கள் நினைப்பது என்ன? நீங்கள் உங்கள் கணவரிடம் எப்படி அன்பை வெளிப்படுத்துவீர்கள்? உங்கள் இருவருக்கும் இடையே சண்டை வருமா? அப்படி சண்டை வரும்போது என்ன யுக்தியை பயன்படுத்துவீர்கள்? கமெண்டில் தெரியப்படுத்தலாமே.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், லைக் செய்யவும், ஷேர் செய்யவும், கமெண்ட் செய்யவும். மேலும், ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.