Paristamil Navigation Paristamil advert login

டெஸ்ட் கிரிக்கெட் வீரர் நீல் வாக்னர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் வீரர் நீல் வாக்னர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

27 மாசி 2024 செவ்வாய் 08:34 | பார்வைகள் : 2299


நியூசிலாந்தின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் நீல் வாக்னர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

2012ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணியில் களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் (Neil Wagner).

மிரட்டலான இடதுக்கை வேகப்பந்துவீச்சாளரான இவர், 64 டெஸ்ட் போட்டிகளில் 260 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். சிறந்த பந்துவீச்சு 7/39 ஆகும்.  

இந்த நிலையில், 37 வயதான வாக்னரின் 12 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் முடிவுக்கு வருகிறது. அவர் தனது ஓய்வினை அறிவித்துள்ளார். 

நீல் வாக்னர் ஓய்வு குறித்து அறிவித்தபோது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். அவர் இந்த முடிவு எளிதானது அல்ல என்றும், ஆனால் முன்னேற இதுவே சரியான நேரம் என்றும் குறிப்பிட்டார். 

மேலும் ஊடகத்திடம் பேசிய அவர் கூறுகையில், ''நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்துள்ளேன். மேலும் ஒரு அணியாக எங்களால் சாதிக்க முடிந்த அனைத்திலும் பெருமைப்படுகிறேன். எனது வாழ்க்கையில் கட்டமைக்கப்பட்ட நட்பு மற்றும் பிணைப்புகளை நான் மிகவும் மதிக்கிறேன்.

இன்று நான் இருக்கும் இடத்தில பங்கு வகித்த அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். 

எனது அணியினர் எப்போதும் எனக்கு உலகத்தையே குறிப்பவர்கள் மற்றும் நான் எப்போதும் செய்ய விரும்புவது அணிக்கு சிறந்தது - அதுதான் நான் விட்டுச் செல்லும் மரபு என்று நம்புகிறேன்'' என தெரிவித்தார்.   

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்