Paristamil Navigation Paristamil advert login

இளையராஜாவின் வாழ்கை வரலாறு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ரஜினி, கமல் ?

 இளையராஜாவின் வாழ்கை வரலாறு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ரஜினி, கமல் ?

26 மாசி 2024 திங்கள் 15:07 | பார்வைகள் : 4003


ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் அவ்வப்போது சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது இருவரும் ஒரே படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியானது என்பதும், இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இளையராஜாவின் கேரக்டரில் தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி இயக்குனர் பால்கி அவர்களுக்கு பதிலாக ’கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இளையராஜாவின் நெருங்கிய நண்பர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் அதேபோல் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டால் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்