Gmail சேவைகள் ஒகஸ்ட் 1ம் திகதி முதல் நிறுத்தம்? Google விளக்கம்!
26 மாசி 2024 திங்கள் 08:52 | பார்வைகள் : 2400
கூகுள் நிறுவனம் தனது email சேவைகளை நிறுத்திக் கொள்ள இருப்பதாக வெளியான செய்திகளை முற்றிலுமாக மறுத்துள்ளது.
சமீபத்தில் Google நிறுவனம் தனது Gmail சேவைகளை ஆகஸ்ட் 1ம் திகதி முதல் நிறுத்தி கொள்ள இருப்பதாக குறிப்பிட்டு email கணக்கின் ஒன்றின் screenshot இணையத்தில் வேகமாக பரவியது.
அத்துடன் அந்த screenshot-இல் Google நிறுவனம் இனி "மின்னஞ்சல்கள் அனுப்புதல், பெறுதல் மற்றும் சேமித்தல் ஆகியவற்றை ஆதரிக்காது". என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கூகுள் Gmail சேவைகள் குறித்த screenshot X தளத்தில் ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டது.
இந்நிலையில் இறுதியில் கூகுள் நிறுவனம் Gmail சேவைகள் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இது தொடர்பாக X தளத்தில் வெள்ளிக்கிழமை கூகுள் பதிவிட்ட தகவலில், “Gmail இங்கே உள்ளது” (Gmail is here to stay) என்று தனது இருப்பை உறுதிப்படுத்தியுள்ளது.