Paristamil Navigation Paristamil advert login

நடுவரை முறையற்ற வகையில் பேசிய வனிந்துவிற்கு போட்டித் தடை

நடுவரை முறையற்ற வகையில் பேசிய வனிந்துவிற்கு போட்டித் தடை

24 மாசி 2024 சனி 09:34 | பார்வைகள் : 2320


இலங்கை இருபதுக்கு - 20 கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு இரண்டு சர்வதேச போட்டித் தடையும் கடந்த போட்டிக் கட்டணத்தில் 50 வீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 22 ஆம் திகதி இடம்பெற்றது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு - 20 போட்டியின் பின்னர் ஒழுக்கமின்றிய முறையில் நடந்து கொண்டமை தொடர்பில் அவருக்கு சர்வதேச கிரிக்கட் பேரவை (ஐ.சி.சி.) இனால் இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக வனிந்து ஹசரங்கவுக்கு ஒரு குற்றப் புள்ளியை வழங்கவும் சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் மார்ச் 04 – 06 ஆம் திகதிகளில் நடைபெற்றவுள்ள பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் வணிந்துவுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காது.

ஆப்கானிஸ்தான் அணியுடனான 3 ஆவது இருபதுக்கு - 20 போட்டியின் போது, இலங்கை நடுவரான லிண்டன் ஹன்னிபல், போட்டியின் முடிவைத் தீர்மானிக்கும் இறுதி ஓவரில் இடுப்புக்கு மேலாக மிக உயரமாக சென்ற பந்தை ‘நோ போல்’ என அடையாளப்படுத்தாமை தொடர்பில், ஊடகவிலளாயர் சந்திப்பின்போது நடுவரை முறையற்ற விதத்தில் பேசி, நடுவரின் முடிவுகளை விமர்சித்ததற்காகவும் வனிந்து ஹசரங்கவுக்கு குறித்த போட்டித்தடையும் அபராதமும் வழங்கப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய வனிந்து, குறித்த பந்தை அவரால் சரியாக கணிக்க முடியாவிட்டால், அவர் வேறு தொழிலுக்குச் செல்லலாம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்