Paristamil Navigation Paristamil advert login

பெண் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று தெரியுமா?

பெண் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று தெரியுமா?

11 பங்குனி 2024 திங்கள் 14:55 | பார்வைகள் : 1005


காலங்கள் மாறினாலும், தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியடைந்தாலும் ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலையை அடைந்துவிட்டோமா என்று கேட்டால் இல்லை என்பதே பதில். குழந்தை வளர்ப்பில் இருந்தே இந்த பாரபட்சம் தொடங்கி விடுகிறது. பெண் குழந்தைகள் ஒரு மாதிரியாகவும், ஆண் பிள்ளைகள் ஒரு மாதிரியாக வளர்க்கபடுகின்றனர். ஆனால் உண்மையாக பெண் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று தெரியுமா?

இன்றும் பல பெற்றோர்கள், மகள்களும், மகன்களும் சமம் என்று கருதுவதில்லை. ஆனால் இது தவறான அணுகுமுறை. பெற்றோர்க் தங்கள் மகன்கள் மற்றும் மகள்களிடையே  வேறுபாடு காட்டக்கூடாது. ஆனால் பல பெற்றோர்கள் இந்த தவறை செய்கிறார்கள். இந்த நவீன காலத்திலும் மகன்களுக்கு முன்னுரிமை கொடுத்து பெண்களை சரியாக நடத்தாதவர்கள் ஏராளம்.

ஆனால் இது உங்கள் மகள்களின் மன ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். ஆனால் ஆண் பிள்ளைகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படுவதில். அவர்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கிறது. ஆனால் இந்தக் கட்டுப்பாடுகள் பெண் குழந்தைகளின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. இதனால் அச்சத்துடன் வாழ்கின்றனர். அல்லது அவர்கள் உங்களிடம் பொய் சொல்லலாம். எனவே இதை செய்யாதீர்கள்.

சிறு வயதில் இருந்தே பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். பள்ளிக்கு எப்படி செல்வது? வீட்டிற்கு எப்படி செல்வது? எப்படி விளையாடுவது என்ன ஆடைகளை அணியக்கூடாது? யாரிடம் பேசுவது? யாரிடம் பேசக்கூடாது? அதிகம் சிரிக்கக்கூடாது, அதிகம் பேசக்கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இந்த கட்டுப்பாடுகளை மீறும் பிள்ளைகளை அடிப்பவர்களும் உண்டு.

இன்றும் பல பெண் குழந்தைகள் தங்களின் பிரச்சனைகளை பெற்றோரிடம் கூட சொல்ல முடிவதில்லை. காரணம் அவர்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லாததுதான். இதனால் தாங்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலை சந்திக்கும் போது கூட  யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். குழந்தைகள் வளர்ந்தாலும் இந்தப் பழக்கம் இருக்கும். இதனால் பேச பயப்படும் பெண்கள், குடும்ப வன்முறை மற்றும் துன்புறுத்தலை தொடர்ந்து அனுபவிக்கிறார்கள் 

பல பெற்றோர்கள் மகள்களை மகன்களுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால் பெண்களின் சுயமரியாதை மற்றவர்களுடன் ஒப்பிடும்போது பாதிக்கப்படுகிறது. பெண் குழந்தைகள் திறமையானவர்களாக இருந்தாலும், உங்கள் வார்த்தைகளால் அவர்கள் பலவீனமாகிறார்கள். இந்த ஒப்பீடு வாழ்க்கையில் எதையும் செய்ய வேண்டும் என்ற ஆசையையும் கொன்றுவிடுகிறது.

பெண் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு சில வகையான பொம்மைகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. ஆனால் சிறுவர்களிடம் பல வகையான பொம்மைகள் உள்ளன. இந்த இடத்தில் இருந்து தான் பாகுபாடு தொடங்குகிறது. பெண்கள் ஆண்களை விட மென்மையானவர்கள். அதனால் பெற்றோர்கள் தான் அவர்களை வலிமையாக்க வேண்டும். அவர்கள் வெளிப்புற விளையாட்டுகளை விளையாட ஊக்குவிக்க வேண்டும். இதையெல்லாம் செய்தால் உங்கள் மகள்கள் புதிய உயரத்திற்கு செல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்