Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் வீதிகளில் ஓடும் வாகனங்களினால் ஆபத்து அதிகம்! அதிர்ச்சி தகவல்

கனடாவில்  வீதிகளில் ஓடும் வாகனங்களினால் ஆபத்து அதிகம்!   அதிர்ச்சி தகவல்

4 ஆவணி 2023 வெள்ளி 06:43 | பார்வைகள் : 2615


கனடாவில் வீதியில் ஓடும் வாகனங்களில் சுமார் 6.6 மில்லியன் வாகனங்கள் பாதுகாப்பற்றவை என கனடிய போக்குவரத்து திணைக்களம் சுட்டிகாட்டியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆய்லேயே இந்த விடயம் இணங்காணப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு வரையில் கனடாவில் சுமார் 33.3 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் சுமார் 20 வீதமான வாகனங்கள் பாதுகாப்பற்றவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உற்பத்தி செய்யும் போது ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக சந்தையிலிருந்து மீளப் பெறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மீளப்பெறப்படாத வாகனங்களினால் ஆபத்து அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

வீதியில் செலுத்துவதற்கு உரிய பாதுகாப்பு தரத்தைக் கொண்டவை அல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பற்ற வாகனங்களில் பயணிப்போர் மட்டுமன்றி வீதியை பயன்படுத்தும் ஏனையவர்களுக்கும் ஆபத்துக்களை ஏற்படுத்த கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சொத்துகளுக்கு சேதம், காயங்கள் சில வேளைகளில் மரணங்களைக் கூட இந்த பாதுகாப்பற்ற வாகனங்கள் ஏற்படுத்தி விடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் போது ஏற்படக்கூடிய கோளாறுகள் தொடர்பில வாகன உற்பத்தி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

 

வர்த்தக‌ விளம்பரங்கள்