ரிலீசுக்கு தயாரான கவுண்டமணியின் ‛ஒத்த ஓட்டு முத்தையா'
19 மாசி 2024 திங்கள் 11:18 | பார்வைகள் : 2325
கவுண்டமணி மற்றும் யோகி பாபு இணைந்து நடித்த ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி நடித்து வரும் திரைப்படம் ’ஒத்த ஓட்டு முத்தையா’. கவுண்டமணி முக்கிய வேடத்தில் நடித்து வந்த இந்த படத்தை சாய் ராஜகோபால் என்பவர் இயக்கி வந்த நிலையில் இந்த படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்து வந்தார்
கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றதாகவும் இதனை அடுத்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை விரைவில் முடித்து வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
சென்டிமென்ட், அரசியல், காமெடி என அனைத்தும் கலந்த இந்த படத்தில் கவுண்டமணி ஒரு அரசியல்வாதியாக நடித்திருப்பதாகவும் அவருக்கு மூன்று சகோதரிகள் இருப்பதாகவும் அந்த மூன்று சகோதரிகளையும் மூன்று சகோதரர்களுக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்று பிடிவாதமாக இருக்கும் கவுண்டமணி தனது சகோதரிகளுக்கு எப்படி திருமணம் செய்து வைத்தார் என்பது தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.
கவுண்டமணியின் சகோதரிகளாக சைதன்யா, அபர்ணா மற்றும் பிந்து ஆகிய மூன்று நடிகைகள் நடித்திருக்கும் நிலையில் இவர்களுக்கு ஜோடியாக நாகேஷ் பேரன் கஜேஷ், மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி மற்றும் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.