Paristamil Navigation Paristamil advert login

பொய் சாட்சி சொல்ல கூடாது 

பொய் சாட்சி சொல்ல கூடாது 

12 மாசி 2024 திங்கள் 14:34 | பார்வைகள் : 1818


ஓர் ஊரில் நல்லரசன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயருக்கு தகுந்தார் போல் நற்குணங்கள் பெற்றவனாக இருந்தான். ஏழை எளியவர்களிடம் அன்பு காட்டும் குணமும் மற்றவர்களுக்கு உதவும் உயர்ந்த மனப்பான்மை அவனிடம் இருந்தன. 

யாராவது தவறு செய்தால் அதனை தட்டிக் கேட்கும் துணிவும் அவனிடம் இருந்தது. அதனால், அதனால் அந்த ஊர் மக்கள் நல்லரசன் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள். அந்த ஊரில் வசதியாக வாழ்ந்து வந்த சிலர் நல்லரசனின் செல்வாக்கு கண்டு அவர் மீது பொறாமை கொண்டனர். 

அவர் புகழை கெடுப்பதற்கு தங்களால் முயன்ற முயற்சிகளை எல்லாம் செய்தார்கள். ஆனால், அவர்களுடைய முயற்சிகள் யாவும் தோல்வியிலே முடிந்தன. பணக்காரர்கள் ஆகிய தங்கவேலும், கருப்பு சாமியும் இதனால் மனம் புழுங்கினர்.

ஏதேனும் ஒரு செயல் செய்த நல்லரசனை அவமானப்படுத்த வேண்டும் என்று துடியாய் துடித்தனர். அந்த பணக்காரர்களுக்கு நல்லரசன் எந்த தீங்குமே செய்யவில்லை. 

ஆனால், கோயில் திருவிழாவாக இருந்தாலும், வேறு பொது செயல்களாக இருந்தாலும் அந்த நல்ல அரசனுக்கே அனைவரும் முதல் மரியாதை கொடுத்தார்கள். இதைத்தான் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 


எப்படியாவது அந்த நல்லரசனை பழிவாங்க வேண்டும் என்று கங்கணம் கட்டி அவர்கள் அந்த ஊரில் வசித்து வந்து முனியாண்டி என்பவனை அழைத்து பேசினார்கள். அந்த முனியாண்டிக்கு ஊர் மக்களிடம் நல்ல பெயர் இருந்தது. அவனை பகடைக்காயாய் பயன்படுத்தி அந்த வல்லரசனை வீழ்த்தி விடலாம் என்று அவர்கள் எண்ணினார்கள். 


தங்கவேலும், கருப்புசாமியும் ஒன்று சேர்ந்து சதித்திட்டம் ஒன்றை தீட்டினார்கள். முனியாண்டியை தங்கள் வீட்டில் அழைத்து பேசினார்கள். “முனியாண்டி, எங்களுக்காக நீ ஒரு செயல் செய்யணும்” என்று கூறி கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை அவன் கையில் திணித்தனர். 

ரூபாய் நோட்டுகளை பார்த்ததும் முனியாண்டிக்கு ஆசை அதிகமானது. அவன் அவர்களை நோக்கி, “உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்”  என்றான். உடனே அவர்கள் அவனைப் பார்த்து இந்த வல்லரசன் தன்னை உத்தமன் போல் காட்டிக்கொண்டு, எங்களுக்கு இந்த ஊரில் மரியாதை இல்லாமல் செய்கிறான். 

அவனுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். அதற்கு தான் உன்னுடைய உதவி தேவை என்றனர். மேலும் அவர்கள் தங்களுடைய சதி திட்டத்தை அவனிடம் விளக்கி கூறினார்கள். “எங்களுடைய மூன்று லட்சம் ரூபாய் பணத்தை எப்படியாவது அந்த நல்லரசனின் வீட்டில் நீ வைக்க வேண்டும். 


நாங்கள் போலீசில் புகார் கொடுத்து அவனை கைது செய்கிறோம் அவன் மூன்று லட்சம் ரூபாயை திருடியதற்கு நீ பொய் சாட்சி சொன்னால் போதும். மற்ற விஷயங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று தங்கவேலும் கருப்புசாமியும் முனியாண்டியிடம் கூறினார்கள். 

முனியாண்டி அவர்களை பார்த்து நீங்கள் சொல்வது போலவே செய்கிறேன் என்று கூறிவிட்டான். தங்கவேலும் கருப்புசாமியும் இதை கேட்டு மகிழ்ந்தார்கள். இந்த சதி திட்டம் அவர்களின் எண்ணம் போலவே நடந்தது. தங்கள் பணம் மூன்று லட்சம் திருடு போய்விட்டதாக அந்த இருவரும் போலீசாரிம் புகார் கொடுத்தார்கள். 

உங்களுக்கு யார் மீது சந்தேகம் இருக்கிறதா என்று அவர்கள் கேட்டதற்கு உடனே முனியாண்டியை அழைத்து போய் காவல் நிலையத்தில் அந்த இருவரும் ஒப்படைத்தனர். அவன் காவல்துறை அதிகாரியிடம், “இந்த ஊரில் நல்லரசன் என்று ஒருவன் இருக்கிறான். 


நேற்று இரவு இவர்களுடைய வீட்டில் இருந்து பணத்தை திருடி கொண்டு வேகமாக போனது என் கண்களாலே பார்த்தேன். நீங்கள் அவனை விசாரித்தால் எல்லாம் உண்மைகளும் தெரிந்து விடும்” என்று அவன் கூசாமல் பொய் சாட்சி சொன்னான்.

காவலர்களும் நல்லரசன் வீட்டுக்கு சென்றனர். அவன் வீட்டை சோதனையிட்டனர் வல்லரசனுக்கு தெரியாமல் முனியாண்டி கொண்டு வந்த மூன்று லட்சம் ரூபாய் அந்த வீட்டு மூலையில் இருந்ததை காவல் அதிகாரிகள் கைப்பற்றினர். 

அவர்கள் நல்லரசனை பார்த்து, “இந்த பணம் உங்கள் வீட்டில் எப்படி வந்தது?” என்று கேட்டார்கள். நல்லரசன் நிதானத்தை இழக்காமல், “சார், இந்த பணம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது எப்படி இங்கே வந்தது என்பதும் எனக்கு தெரியாது. இதுல ஏதோ சதி திட்டம் இருக்கிறது. 

அந்த முனியாண்டியை நீங்கள் கண்காணித்தால் உங்களுக்கு விஷயம் தெரிந்து விடும். உங்களோடு விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன்” என்றான். ஊர் மக்களின் நன்மதிப்புக்குரியவன் வல்லரசன் என்பதால் அவனுக்கு மதிப்பு கொடுத்து காவல் அதிகாரிகள் முனியாண்டின் வீட்டுக்கு சென்று சோதனை இட்டனர்.

அவன் வீட்டிலிருந்து சில ரூபாய் கட்டுகளை காவல்துறையினர் கைப்பற்றினார்கள். அந்த கட்டுகளை சோதித்ததில் அவை அனைத்துமே கள்ள நோட்டுகள் என்பது தெரிந்தது. முனியாண்டி சிறையில் அடைக்கப்பட்டான். 


கள்ள நோட்டு வழக்கில் அவன் பெயரை சேர்த்தார்கள். அதை அறிந்த முனியாண்டி, காவல் அதிகாரியை பார்த்து, “சார், எனக்கு அது போல் புத்தி எல்லாம் கிடையாது. பணத்துக்கு ஆசைப்பட்டு உத்தமரான நல்லரசனுக்கு எதிராக போய் சாட்சி கூறினேன். 

அதுக்கு கடவுள் எனக்கு சரியான தண்டனை கொடுத்துவிட்டார். தங்கவேலும், கருப்புசாமியும் இருவரும் என் தான் என்னை இவ்வாறு செய்ய சொன்னார்கள். மற்றபடி கள்ள நோட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” என்று எல்லா உண்மையும் கூறிவிட்டான். 

உடனே காவல்துறை அதிகாரிகள் தங்கவேலு மற்றும் கருப்பசாமியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிகழ்ச்சியின் மூலம் நல்லரசின் மீது மக்களுக்கு இருந்தன் நன்மதிப்பு மேலும் கூடியது.

நீதி : யார் மீதும் எப்பொழுதும் பொய்சாட்சி சொல்ல கூடாது. அது ஒரு நாள் வெளிப்பட்டு பொய் சாட்சி கூறியவரே தண்டனைக்கு உட்படுத்தி விடும். எனவே, அனைவரும் மனசாட்சிக்கு உட்பட்டு நல்லவர்களாக வாழ வேண்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்