இமான் இசையில் மீண்டும் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல்..எந்த படத்திற்கு?
12 மாசி 2024 திங்கள் 10:38 | பார்வைகள் : 1412
கடந்த சில வாரங்களுக்கு முன் பார்த்திபன் அடுத்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடினார் என்பதும் இந்த பாடலை இசையமைப்பாளர் டி இமான் கம்போஸ் செய்தார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் டி இமானின் இசையில் மீண்டும் ஒரு பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டி. இமான் தனது சமூக வலைத்தளத்தில் ’ஸ்ருதிஹாசன் எனது இசையில் மீண்டும் ஒரு பாடலை பாடியது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இந்த பாடல் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக்கி வரும் ’லெவன்’ என்ற படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தின் மோஷன் போஸ்டரை நேற்று ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்திற்காக அவர் ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நவீன் சந்திரா, ரேயா ஹரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லோகேஷ் என்பவர் இயக்கி உள்ளார். இமான் இசையில், கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.