விக்னேஷ் சிவனால்.. தர்மசங்கடத்தில் சீமான்?
10 மாசி 2024 சனி 11:36 | பார்வைகள் : 2739
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் ’எல்.ஐ.சி’ என்ற திரைப்படத்தில் சீமான் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் தற்போது அவருடைய கேரக்டர் விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இதனால் சீமான் தர்ம சங்கடத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விக்னேஷ் சிவன் மற்றும் சீமான் முக்கிய வேடத்தில் நடிக்கும் ’எல்.ஐ.சி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவை அருகே உள்ள ஈஷா தியான மையத்தில் நடந்தது என்பதும் அதில் சீமான் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க மட்டுமே சீமானிடம் விக்னேஷ் சிவன் கால்ஷீட் பெற்ற நிலையில் தற்போது அவரது கேரக்டர் விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், கிட்டத்தட்ட படம் முழுவதும் வரும் கேரக்டர் என்பதால் அவரிடம் கூடுதலாக கால்ஷீட் கேட்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
சீமானுக்கு இதில் சந்தோஷம் தான் என்றாலும் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யும் பணிகள் இருப்பதால் கூடுதலாக எப்படி கால்ஷீட் கொடுப்பது என்று தர்ம சங்கடத்தில் சீமான் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் விக்னேஷ் சிவனுக்காக அவர் கூடுதல் நாட்கள் கால்ஷீட் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது