Paristamil Navigation Paristamil advert login

முழுதாய் முத்தமாய்…

முழுதாய் முத்தமாய்…

2 தை 2024 செவ்வாய் 09:34 | பார்வைகள் : 6197


அத்தனை வேகமாகவா கடந்து விடும்
அந்த நொடி

யாரும் கவனிப்பதாய் தெரியவில்லை
என்றதும்

மெல்ல இறுகி பிடித்திருந்த கைகளை
விலக்கி விட்டு

உருண்ட விழி இரண்டும் அதன் எல்லைகளை
அடைந்து விட்டு

எனைப் பார்த்த அந்த நொடிகள் அப்படியே என்னுள்
பதிந்து விட

சட்டென என் நெற்றியில் அவள் உதடுகள்
ஏற்படுத்திய மாயம்

நொடியினும் குறைந்த அந்த அரை மாத்திரை
பொழுது

முழுதாய் முத்தமாய்

நான் ஆகி போக

இருப்பிடம் யாதும் தேவையின்றி
இன்றுவரை ஈரப்பதம் நிறைந்திட
அவள் உதடுகளின் இடுக்கனிலே

இருக்கிறேன்

இசையூற்றாய்

முழுதாய் முத்தமாய்…

வர்த்தக‌ விளம்பரங்கள்