இறைவன்
3 கார்த்திகை 2023 வெள்ளி 02:04 | பார்வைகள் : 3371
ஒளியாய் இருக்கின்றான் சூரியராய் சந்திரனாய்
ஒலியாய் இருக்கின்றான் மறையின் ஒலியாய்
ஒளியிற்கப்பால் உருவாய் இருக்கின்றான் அவன்
ஸத் சித் ஆனந்த ரூபனாய் இதை
அறிந்தும் மனமே இன்னும் ஏன்
'நான்' என்னும் அகந்தையில் வீணே
வாழ்கின்றாய் 'அவன்' பாதம் பற்றாது