அமெரிக்காவின் 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி
13 ஆடி 2023 வியாழன் 06:23 | பார்வைகள் : 17534
அமெரிக்காவின் ஓக்லஹோமா ஏரியில் இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
திங்கட்கிழமை காலை 10 மற்றும் 11 வயதுடைய இனந்தெரியாத சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், பிள்ளைகள் தமது பிறந்தநாளைக் கொண்டாடியபொழுது இவ்வாறு நடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஓவர்ஹோல்சர் ஏரியில் அணைக்கு அருகே நான்கு சிறுவர்கள் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், அதிலொரு சிறுவன் தனது காலணியை தண்ணீரில் தொலைத்தபோது, ஒட்டுமொத்த குழுவும் அதை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதன் போது இரு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்திற்கு சென்ற ஓக்லஹோமா நகர தீயணைப்புத் துறையின் தீயணைப்பு வீரர்கள் திங்கள்கிழமை இரவு ஒரு சிறுவனின் உடலையும், செவ்வாய்க்கிழமை காலை மற்றொரு சிறுவனின் உடலையும் கண்டெடுத்தனர்.
அணையில் தண்ணீர் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து, தண்ணீர் அதிகமாக பாய்ந்ததே விபத்துக்குக் காரணம் எனகூறப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan