பொங்கல் போட்டியிலிருந்து விலகும் 'தங்கலான்'?
14 ஐப்பசி 2023 சனி 14:09 | பார்வைகள் : 6348
2024ம் ஆண்டு பொங்கலுக்கு 'அயலான், அரண்மனை 4, லால் சலாம், தங்கலான்' ஆகிய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் 'தங்கலான்' படத்தைத் தவிர மற்ற படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது.
'லால் சலாம், அரண்மனை 4' ஆகிய படங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 'அயலான்' படத்திற்கும் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் 'தங்கலான்' படம் பொங்கல் போட்டியிலிருந்து விலகும் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை விற்றுவிட்டார்களாம். ஆனால், சாட்டிலைட் உரிமைக்காக ஒரு முன்னணி சேனல் படத்தைப் பார்த்ததும் வாங்காமல் பின்வாங்கி விட்டார்களாம். இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்திற்காக விக்ரம் மிகவும் சிரமப்பட்டு நடித்து வருகிறார். மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து ஆகியோரும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். பா ரஞ்சித் இயக்கும் இப்படம் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்கெனவே இருந்தது. இந்நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமை பற்றி வெளியான தகவல்கள் ஏமாற்றத்தைத் தருவதாக உள்ளது என்கிறார்கள்.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Coupons
Annuaire
Scan