பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் வாரமே வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?
7 ஐப்பசி 2023 சனி 09:43 | பார்வைகள் : 8481
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த ஐந்து நாள் நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் முதல் வாரமே நாமினேஷன் படலம் நடந்தது என்பதும் இதில் போட்டியாளர்கள் நாமினேஷன் செய்ததில் ஏழு பேர் எலிமினேஷன் பட்டியலில் இருந்தனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இன்றுடன் வாக்குகள் பதிவு செய்யும் நாள் முடிவடைவதால் தற்போது வாக்குகள் விவரங்கள் வெளியாகி உள்ளது. நாமினேஷன் செய்யப்பட்ட ரவீனா, ஐஷு, பிரதீப் அந்தோணி, ஜோவிகா, பவா செல்லத்துரை, யுகேந்திரா மற்றும் அனன்யா ஆகிய ஏழு பேர்களில் ரவீனா சுமார் 26 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.
கடைசி மூன்று இடத்தில் பவா செல்லத்துரை, யுகேந்திரன் மற்றும் அனன்யா இருக்கின்றனர் என்பதும் இதில் அனன்யா மிகவும் குறைவான வாக்குகள் அதாவது 8% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால் இவர் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பெரும் கனவுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததாக முதல் நாள் கூறிய அனன்யா முதல் வாரமே வெளியேற்றப்படுவார் என்றால் அது மிகவும் சோகமாக தான் இருக்கும்.
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan