காதல் விரக்தியிலிருந்த த்ரிஷா மீண்டும் சினிமாவில் சாதித்தது எப்படி?
8 ஐப்பசி 2023 ஞாயிறு 15:40 | பார்வைகள் : 12519
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக சின்ன, சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த திரிஷா, விக்ரம் நடிப்பில் வெளியான ‘சாமி’ படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனையடுத்து, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பையும், புகழையும் கொடுத்துள்ளது.
ஆனால், த்ரிஷாவிற்கு நடுவில் சில காலம் பெரிய போராட்டங்களை சந்தித்தார். த்ரிஷாவுக்கு ஒரு தொழிலதிபருடன் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால், அந்த நிச்சயம் திருமணத்துக்கே செல்லாமல் பாதியிலேயே நின்றுபோனது.
அதன் பிறகு, தெலுங்கில் த்ரிஷா சக்கைபோடு போட்டார். அந்த சமயம் த்ரிஷாவிற்கும், ராணாவிற்கு காதல் மலர்ந்தது. ஆனால் ராணாவின் குடும்பம் த்ரிஷாவை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து, தெலுங்கில் த்ரிஷாவிற்கு வாய்ப்பு குறைந்தது.தெலுங்கிலும், தமிழிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனையடுத்து, மணிரத்னம் த்ரிஷாவிற்கு வாய்ப்பு கொடுத்தார்.
தன் கனவு படமான பொன்னியின் செல்வனில் நடிக்க வைத்தார். இந்த வாய்ப்பை த்ரிஷா சரியாக பயன்படுத்தினார். நடிப்பில் பிச்சு உதறினார். இப்படத்திற்கு பிறகு த்ரிஷாவிற்கு ‘லியோ’ படத்தில் வாய்ப்பு வந்தது. அதேவேளையில் ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்திற்கு த்ரிஷா ஜோடியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan