32 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி - அமிதாப் கூட்டணி
3 ஐப்பசி 2023 செவ்வாய் 13:15 | பார்வைகள் : 7964
’தலைவர் 170’ என்ற படத்தின் அறிவிப்புகள் நேற்று முதல் வெளியாகி கொண்டிருக்கின்றன. நேற்று துஷாரா விஜயன், ரித்திகா சிங் மற்றும் மஞ்சு வாரியர் ஆகிய மூன்று நடிகைகள் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் இன்று இந்த படத்தில் பாகுபலி நடிகர் ரானா டகுபாய் இணைந்து இருப்பதாக காலையில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பகத் பாசில் மற்றும் அமிதாப்பச்சன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் முதல் முறையாக பகத் பாசில் இணைகிறார் என்பதும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் 33 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ’ஹம்’ என்ற திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் அமிதாப்பச்சனும் சேர்ந்து நடிக்கும் படம் இதுதான் என்பதும் அதேபோல் அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைவர் 170’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வுகள் குறித்த அறிவிப்புகளில் இருந்து இந்த படம் பிரமாண்டமாக உருவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan