வாழைப்பழ தோசை
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 16299
சில குழந்தைகள் தோசை சாப்பிட அடம் பிடிப்பார்கள். அப்படி அடம் பிடிக்கும் குழந்தைகளை தோசை சாப்பிட வைக்க வேண்டுமானால், வாழைப்பழ தோசை செய்து கொடுங்கள். இந்த தோசை சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். மேலும் இந்த தோசையை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் கூட கொடுத்து அனுப்பலாம். அந்த அளவில் இந்த தோசை நீண்ட நேரம் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு இருக்கும். சரி, இப்போது அந்த வாழைப்பழ தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 3
அரிசி மாவு - 1 கப்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
முந்திரி - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
தண்ணீர் - 1/2 கப் நெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாழைப்பழத்தை நன்கு கையால் மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் அரிசி மாவு, மைதா, சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு நறுக்கிய உலர் திராட்சை மற்றும் முந்திரியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், ஒரு கரண்டி கலந்து வைத்துள்ள மாவை தோசை போன்று ஊற்றி, சிறிது நேரம் கழித்து மசித்து வைத்துள்ள வாழைப்பழத்தை சிறிது நடுவே வைத்து, நெய் ஊற்றி தீயை குறைவில் வைத்து, தோசை வெந்ததும் எடுக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டு எடுக்க வேண்டும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan