Paristamil Navigation Paristamil advert login

ஆம வடை

ஆம வடை

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 14135


ஆம வடை என்பது வேறொன்றும் இல்லை, அது கடலைப்பருப்பு வடை தான். ஆம் நம் ஊரில் கடலைப்பருப்பு வடையை ஆம வடை என்று தான் சொல்வார்கள். உங்களுக்கு இந்த வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக அந்த ஆம வடை ரெசிபியை கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 250 கிராம்
சோம்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பட்டை - 1 துண்டு
பச்சை மிளகாய் - 6 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கடலைப்பருப்பை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை கழுவி, சிறிது நேரம் உலர வைக்க வேண்டும். பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சோம்பு, பட்டை சேர்த்து ஓரளவு அரைக்க வேண்டும்.

பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்தும், அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை வடைகளாக தட்டி போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ஆம வடை ரெடி!!!

 

வர்த்தக‌ விளம்பரங்கள்