விவாகரத்தை அதிகரிக்கச் செய்யும் பேஸ்புக் - ஆய்வில் அதிர்ச்சி
3 ஆடி 2014 வியாழன் 18:18 | பார்வைகள் : 14376
சமூக இணையத்தளமான பேஸ்புக்கை உபயோகிப்பவர்களில் 32 சதவீதத்தினர் தமது வாழ்க்கை துணையை விட்டு விலகுவது தொடர்பில் சிந்திப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது.
அமெரிக்க போஸ்டன் நகரைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் ஈ காட்ஸ் தலைமையிலான ஆய்வாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இரு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பேஸ்புக்குகளை உபயோகிக்கும் 43 நாடுகளைச் சேர்ந்த விவாகரத்து பெற்ற, திருமணம் செய்து கொண்ட18 வயதுக்கும் 39 வயதுக்குமிடைப்பட்ட வயதுடைய 1160 தனி நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பேஸ்புக்கை அதிகளவில் உபயோகிப்பவர்கள் விவாகரத்து தொடர்பில் 2.18 சதவீத வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.


























Bons Plans
Annuaire
Scan