மின்கலத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் கார்கள் அறிமுகம்

18 ஆவணி 2014 திங்கள் 14:41 | பார்வைகள் : 13992
Tesla நிறுவனம் கடந்த 2008ம் ஆண்டு மின்கலத்தை பயன்படுத்தி 245 மைல்கள் பயணிக்கக்கூடிய கார்களை அறிமுகம் செய்திருந்தது.
இக்கார்கள் அமெரிக்காவில் 2011ம் ஆண்டு வரையிலும், ஏனைய நாடுகளில் 2012ம் ஆண்டு வரையிலும் விற்பனையில் இருந்தது.
தற்போது Tesla நிறுவனம் பல்வேறு புதிய மொடல் கார்களை உற்பத்தி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
இவற்றுள் முன்னர் 245 மைல்கள் மின்கலத்தில் பயணித்த கார்களைப் போன்று 400 மைல்கள் பயணிக்கக்கூடியவாறான மின்கலத்தினை உள்ளடக்கிய புதிய கார் ஒன்றினையும் வடிவமைத்து வருகின்றது.
இக்கார் தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.