கூகிள் நிறுவனத்தின் மற்றுமொரு பரிமாணம்!

1 புரட்டாசி 2014 திங்கள் 17:50 | பார்வைகள் : 13968
இணைய உலகில் வேரூன்றிய போதிலும் தனது கிளைகளை பல்வேறு தொழில்நுட்ப திசைகளில் பரப்பி வரும் கூகுள் நிறுவனம் தற்போது மற்றுமொரு புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளது.
ஆளில்லா பறக்கும் கருவிகள் (ட்ரோன்) மூலம் பொருட்களை விநியோகிக்க வாய்ப்பளிக்கும் கூகுகிளின் Project Wing என்ற தொழில்நுட்பம் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
Project Wing என்பது உலகின் மிகப் பிரபலமான தேடுபொறி நிறுவனத்திற்கு சொந்தமான பாரிய தொழில்நுட்ப முன்னேற்ற அமைப்பான Google X மூலம் வடிவமைக்கப்பட்டதாகும்.
இதனை பரீட்சார்த்த மட்டத்திற்கு முன்னேற்றுவதற்கும் இரண்டு வருடங்கள் தேவைப்பட்டுள்ளது.
இந்த விமானங்களைப் பயன்படுத்தி டெலிவரி சேவையை வழங்கவுள்ளதுடன், இதன் மூலம் பயனர்கள் 30 நிமிட நேரத்தினுள் ஒன்லைனில் கொள்வனவு செய்யும் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.
நீல் பார்ஃபிற் என்பவர் ஆளில்லா பறக்கும் கருவிகள் மூலம் நாய்களுக்கான உணவுகளையும், சொக்லேற்றுக்களையும் தருவிக்க ஓர்டர் செய்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் பார்சல்கள் விநியோகிக்கப்பட்ட முதலாவது நபர் தானென்பது பொருட்கள் கையில் கிடைத்தபோது தான் தமக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ட்ரோன்கள் மூலம் பொருட்கள் விநியோகிக்கப்படும் காட்சி வீடியோவிலும் படம் பிடிக்கப்பட்டது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025