Paristamil Navigation Paristamil advert login

உலகின் முதலாவது பறக்கும் கார் அறிமுகம்!

உலகின் முதலாவது பறக்கும் கார் அறிமுகம்!

17 ஐப்பசி 2014 வெள்ளி 07:52 | பார்வைகள் : 15450


உலகின் முதலாவது பறக்கும் கார் விற்பனைக்கு வரவுள்ளது, இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

 
இம்மாதம் 29ஆம் திகதி இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளதாக உற்பத்தி பணியில் ஈடுபட்ட பிரதம பொறியியலாளர் ஸ்டெபன் க்ளீன் குறிப்பிட்டுள்ளார்.
 
AeroMobil 3.0 என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் வீதியில் பயணிக்கும் அதேவேளை ஆகாயத்தில் பறக்கவும் செய்கிறது.
 
1990 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட முயற்சி தற்போது கைகூடியுள்ளதாக குறித்த காரின் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
எதிர்வரும் 29ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள The Pioneers Festival இல் இந்த கார் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்