புதிய அம்சங்களுடன் Audi RS Q3 கார் விரைவில் அறிமுகம்
10 கார்த்திகை 2014 திங்கள் 13:44 | பார்வைகள் : 15055
கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களுள் ஒன்றான Audi இறுதியாக அறிமுகம் செய்திருந்த Audi Q3 இன் புதிய பதிப்பினை அறிமுகம் செய்யவுள்ளது.
Audi RS Q3 எனும் இப் புதிய பதிப்பானது முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட காரிலும் புதிய அம்சங்கள் உட்பட வினைத்திறன் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் வலுவானது முன்னைய காரிலும் 40 குதிரை வலுக்கள் அதிகரிக்கப்பட்டு 340 குதிரை வலுக் கொண்டதாக காணப்படுகின்றது.
மேலும் இதில் 2.5 லிட்டர் கொள்ளளவு உடைய 5 சிலின்டர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன் அதி உச்ச வேகம் மணிக்கு 155 மைல்களாக இருப்பதுடன் 4.8 செக்கன்களில் மணிக்கு 100 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தை எட்டவல்லதாகக் காணப்படுகின்றது.
56,600 யூரோக்கள் பெறுமதியான இக்கார் 2015ம் ஆண்டின் முன்பகுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan