Archos அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் கடிகாரம்

3 தை 2014 வெள்ளி 10:08 | பார்வைகள் : 14794
ஸமார்ட் கைப்பேசி வரவைத் தொடர்ந்து ஸ்மார்ட் கடிகாரங்களும் அறிமுகமாகிவருகின்றமை அறிந்ததே.
இவ் உற்பத்தியில் சம்சுங், சோனி போன்ற பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு இறங்கியுள்ள நிலையில் Archos நிறுவனமும் தனது ஸமார்ட் கடிகாரத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்படி இந்த வருடம் இடம்பெறவுள்ள சர்வதேச இலத்திரனியல் சாதனங்களின் கண்காட்சியில் தனது அன்ரோயிட் ஸ்மார்ட் கடிகாரத்தினை Archos அறிமுகம் செய்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.