இன்டெல் அறிமுகம் செய்யும் Education Tablet
                    23 தை 2014 வியாழன் 16:43 | பார்வைகள் : 16501
இன்டெல் நிறுவனமானது Education Tablet, classmate PC எனும் இருவகை கணனிச் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.
Atom Z2520 processor இனைக் கொண்டுள்ள Education Tablet ஆனது 70 சென்டிமீற்றர்கள் வரையான ஆழத்தினுள் நீர் உட்புக முடியாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் 3G மொடம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது, 10 அங்குல அளவுடைய திரையினைக் கொண்ட இந்த டேப்லட்டில் 12 மணித்தியாலங்கள் வரை மின்சக்தியை வழங்கக்கூடிய மின்கலம் காணப்படுகின்றது.
Classmate PC ஆனது விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினைக் கொண்டதாகவும், N2806 Celeron processor உடையதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனினும் இதில் விண்டோஸ் 7, லினக்ஸ் இயங்குதளங்களைக் கொண்டதும் Celeron N2805 processor இனைக் கொண்டதுமான பதிப்புக்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan