அப்பிள் நிறுவனத்தின் அதிரடி!

3 பங்குனி 2014 திங்கள் 16:06 | பார்வைகள் : 13925
அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி மற்றும் டேப்லட் என பல புரட்சிகளை செய்துவரும் அப்பிள் நிறுவனம் தற்போது சூரிய கலத்தில் இயங்கக்கூடிய மடிக்கணினிகளை உருவாக்கவுள்ளது.
மடிக்கணினிகளின் மேற்பகுதியை சூரிய படலங்ளைக் கொண்டு வடிவமைத்து அதன் மூலம் மின்கலத்தில் மின்சக்தியை சேமிப்பதுடன் தொடுகை உணரிகளிலும் (Touch Sensors) மின்சக்தியை சேமிக்கக்கூடியவாறு வடிவமைக்கவுள்ளது.
இது வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் டேப்லட், கைப்பேசி போன்ற ஏனைய சாதனங்களிலும் இத்தொழில்நுட்பத்தினை பயன்படுத்த முடியும் என அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.