அப்பிளின் iOS 8 இயங்குதளத்தில் அறிமுகமாகவுள்ள புதிய வசதி

14 வைகாசி 2014 புதன் 15:54 | பார்வைகள் : 14590
அப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ள iOS 8 இயங்குதளப் பதிப்பில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதாவது iPad சாதனங்களில் இவ் இயங்குதளத்தினை பயன்படுத்தும்போது ஒரே தடவையில் இரண்டு திரைகளைத் தோற்றுவித்து ஒன்றிற்கு மேற்பட்ட வேலைகளைச் செய்ய முடியும். இவ்வசதி Split Screen Multitasking என அழைக்கப்படுகின்றது.
இப்புதிய வசதியை உள்ளடக்கிய இயங்குதள பதிப்பினை கொண்டு அறிமுகமாகவுள்ள முதல் சாதனமாக 9.7 அங்குல அளவுடைய iPad Air கருதப்படுகின்றது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025