Whatsappல் புதிய வசதி அறிமுகம்
27 ஐப்பசி 2016 வியாழன் 23:59 | பார்வைகள் : 14596
சமூக வலைதளங்களில் வாட்ஸ் அப் மிக பிரபலமானதாக திகழ்கிறது. இதை உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வாட்ஸ் அப்பில் இது நாள் வரை ஆடியோ காலிங் வசதி மட்டுமே இருந்து வந்தது. இந்த நிலையில் ஆண்டராய்டு இயங்குதளத்தில் வாட்ஸ் அப்பை பயன்படுத்துபவர்களுக்கு வீடியோ காலிங் வசதியை தற்போது அதிகாரபூர்வமாக அந்த நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது.
ஆனால் அதில் ஒரு டிவிஸ்ட்! ஆண்ட்ராய்டில் வாட்ஸ் அப் ’பீட்டா’ பயனாளிகளுக்கு மட்டுமே இந்த சேவை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கால் செய்பவருக்கும் அதை மறுமுனையில் அட்டண்ட் செய்பவருக்கும் போனில் பீட்டா பதிப்பு நிச்சயம் இருக்க வேண்டும்.
ஒரு வேளை நாம் வீடியோ கால் மேற்கொள்பவர் பீட்டா இல்லாத பழைய பதிப்பு வாட்ஸ் அப்பை பயன்படுத்தினால் போனில் “Couldn’t place call” என்ற வார்த்தை கேட்கும்படி அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ காலிங் வசதி வரும் காலத்தில் எல்லா வித வாடிக்கையாளர்களும் பயன்படுத்தும் வகையில் வெளிவருமா என்பதை பற்றி அந்நிறுவனம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்படத்தக்கது.

























Bons Plans
Annuaire
Scan