iPhone SE கைப்பேசி பற்றிய புதிய தகவல்

1 பங்குனி 2016 செவ்வாய் 14:53 | பார்வைகள் : 14130
iPhone SE ஸ்மார்ட்கைப்பேசி எப்படியிருக்கும், அதில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து வாடிக்கையாளர்களின் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சில்லறை விற்பனை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஸ்மார்ட்கைப்பேசி வரிசையில் எப்போதும் முன்னணி நிறுவனமாக இருக்கும் அப்பிள் நிறுவனத்தின் அடுத்த படைப்பு தான் iPhone SE ஸ்மார்ட்கைப்பேசி.
4 இன்ச் தொடுதிரை, A9 ப்ராசசர், 2GB RAM மற்றும் இரண்டு சேமிப்பு வசதியாக, 16GB, 64GB உள்ளது.
மேலும், மார்ச் மாதம் 21 ஆம் திகதி இந்த கைப்பேசியோடு சேர்த்து 9.7 இன்ச் தொடுதிரை கொண்டு Ipad pro டேப்லட்டும் வெளியாகும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், iPhone SE ஸ்மார்ட்கைப்பேசியின் சில்லறை விற்பனையின் விலை 400 டொலர் அல்லது 500 டொலர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025