Paristamil Navigation Paristamil advert login

2.5 நிமிடத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்கு உருவாக்கப்பட்ட ரோபோ!

2.5 நிமிடத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்கு உருவாக்கப்பட்ட ரோபோ!

23 வைகாசி 2017 செவ்வாய் 10:19 | பார்வைகள் : 13916


 மனித வாழ்வின் அனேகமான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் ரோபோ தொழில்நுட்பம் மருத்துவ துறையையும் விட்டுவைக்கவில்லை.

 
இலகு, நுணுக்கம் மற்றும் விரைவு என்பவற்றின் அடிப்படையில் ரோபோக்கள் செயற்படுவதனால் மருத்துவத்துறையில் முக்கிய பங்கினை வகிக்கின்றன.
 
இந்நிலையில் தற்போது மூளைச் சத்திரசிகிச்சை செய்யக்கூடிய ரோபோ ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
 
இந்த ரோபோவானது வைத்தியர்கள் இரண்டு மணித்தியாலத்தில் செய்து முடிக்கும் சத்திரசிகிச்சையை வெறும் 2.5 நிமிடத்தில் செய்யக்கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கின்றது.
 
அமெரிக்காவில் உள்ள Utah பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஒன்றே இந்த ரோபோவினை வடிவமைத்துள்ளது.
 
மேலும் CT ஸ்கான் தொழில்நுட்பத்தில் மூளையின் பகுதிகளை வேறுபிரித்து அறியக்கூடிய திறனையும் குறித்த ரோபோ கொண்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்