பேஸ்புக்கில் பயனாளர்களுக்கு ஓர் அவசர செய்தி!
11 மார்கழி 2016 ஞாயிறு 14:53 | பார்வைகள் : 12077
சமூகவலைதளங்களில் முன்னணி வகிக்கும் பேஸ்புக்கானது சில சமயங்களில் ஏதாவது சர்ச்சையில் சிக்குவதுண்டு.
இப்படி தான் சில வாரங்களுக்கு முன்னர் பேஸ்புக் நிறுவனர் Mark Zuckerberg இறந்து விட்டார் என செய்தி பேஸ்புக்கில் போடப்பட்டு பின்னர் அது தவறாக போடப்பட்டதாக பின்னர் விளக்கமளிக்கப்பட்டது.
அதே போல தற்போது பேஸ்புக் பயன்படுத்துவோரிடமிருந்து ஒரு புகார் எழுந்துள்ளது.
எப்போதோ பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் போட்ட ஸ்டேடஸ்கள் அவர்கள் அனுமதி இல்லாமல் மீண்டும் அவர்கள் புதிதாக போட்டது போல எந்தவொரு லைக் மற்றும் கமெண்ட்ஸ்கள் இல்லாமல் அவர்கள் டைம் லைனில் வருகிறது.
இது குறித்து பல பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளனர்.
ஷான் பெக் என்பவர் கூறுகையில், பேஸ்புக், என் பழைய போஸ்டுகளை மீண்டும் போடுவதை நிறுத்து, எனக்கு பதில் நீ ஒன்றும் என் பதிவை போட தேவையில்லை என கூறியுள்ளார்.
இது குறித்த புகார் பேஸ்புக்கிற்கு போயுள்ள நிலையில் அவர்கள் இன்னும் விளக்கமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan