Paristamil Navigation Paristamil advert login

WhatsApp குறுந்தகவல்களை மற்றவர்களும் பார்க்க முடியும்?

WhatsApp குறுந்தகவல்களை மற்றவர்களும் பார்க்க முடியும்?

15 தை 2017 ஞாயிறு 10:34 | பார்வைகள் : 11608


 இன்று உலகமே வாட்ஸ்அப் பாதையில் தான் பயணிக்கிறது. அப்படிப்பட்ட வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் குறுந்தகவல்களை மற்றவர்களும் பார்க்க முடியும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. இதனை வாட்ஸ் அப் நிறுவனம் மறுத்துள்ளது.

 
உலகில் மிக குறுகிய காலத்தில் பிரபலமான சாட்டிங் செயலி வாட்ஸ்அப். முழுமையான என்க்ரிப்ஷன் வசதி கொண்ட செயலியாக உள்ளதே வாட்ஸ்அப்பின் சிறப்பம்சமாகும்.
 
இன்று கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் குறுந்தகவல்களை, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரியாமல் மற்றவர்களும் படிக்க முடியும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. இது பயனர்களின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால் இத்தகவலை வாட்ஸ்அப் நிறுவனம் மறுத்துள்ளது.
 
வாட்ஸ்அப் சிக்னல் ப்ரோடோகால் மூலம் வாட்ஸ்அப்பிற்கு என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்படுகிறது. இதில் புதிதாக வந்துள்ள என்க்ரிப்ஷன், வாடிக்கையாளர்கள் ஆஃப்லைனில் இருக்கும் போதும் கூட வாட்ஸ்அப்பை இயக்க வழி செய்கிறது என்றும், இது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அப்படி ஒரு தொழிநுட்பமே வாட்ஸ்அப்பில் இல்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்