இன்ஸ்டாகிராமில் அப்டேட் ஆகியுள்ள புதிய வசதி!

4 மாசி 2017 சனி 13:51 | பார்வைகள் : 11436
ஒரே சமயத்தில் பல புகைப்படங்களை சேர்த்து அனுப்பும் புதிய வசதியுடன் இன்ஸ்டாகிராம் அப்டேட் ஆகியுள்ளது.
பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் என்னதான் வீடியோக்கள், புகைப்படங்களை பகிரும் வசதி தரப்பட்டிருந்தாலும் இன்ஸ்டாகிராமிற்கு என்று ஒரு தனி மவுசு இருக்கத்தான் செய்கின்றது.
ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் 600 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. இத் தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதுடன் அவற்றிற்கு கமண்ட் (Comment) செய்யும் வசதியும் உள்ளது.
சமூக வலைத்தளத்தில் பிரபலமாக பேசப்படும் இந்த இன்ஸ்டாகிராமில் ஒரே ஒரு போட்டோ மட்டுமே இதுவரை அனுப்பமுடியும். ஆனால் தற்போது பல புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் புதிய வசதி அப்டேட் ஆகியுள்ளது.
இதன்மூலம் ஸ்மார்ட்போன் கேலரியில் இருந்து சுமார் 10 புகைப்படங்களை ஆல்பமாக இணைத்து உங்கள் டைம்லைனில் பகிர்ந்து கொள்ளலாம்.