புதிய வசதியை அறிமுகம் செய்துள்ள Face book

17 மாசி 2017 வெள்ளி 10:59 | பார்வைகள் : 11208
பேஸ்புக் நிறுவனம் பாவனையாளர்களுக்கு எற்றால் போல பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் தற்போது மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ள நிலையில், டெக்ஸ்டாப் அல்லது லேப்டொப் கணினிகளுக்காக அறிமுகமாகும் இந்த வசதியானது தற்போது பரிசோதனை நிலையிலேயே காணப்படுகின்றது.
Pop-Out எனப்படும் இவ் வசதியானது பேஸ்புக்கினை ஒருவர் பயன்படுத்தும்போது நண்பர்களால் மேற்கொள்ளப்படும் பதிவுகளை மற்றுமொரு சிறிய விண்டோவில் தோற்றுவிப்பது ஆகும்.
இதன் காரணமாக நண்பர்களின் பதிவுகளை உடனுக்கு உடன் பார்க்க முடிவதுடன், தவற விடும் வாய்ப்புக்களும் மிகக் குறைவாக இருக்கும்.
இதேவேளை பின்னணியில் வழமையான பேஸ்புக் பக்கம் காணப்படுவதுடன் Pop-Out விண்டோவை இல்லாமல் செய்யும் Close வசதியும் காணப்படுகின்றது.