WhatsApp பயன்பாட்டாளர்களுக்கு ஓர் நற்செய்தி!

23 மாசி 2017 வியாழன் 15:22 | பார்வைகள் : 10705
சமூகவலைதளங்களில் முன்னணியாக திகழும் வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் ஒன்று வரவிருக்கிறது.
வருகிற 24 ஆம் திகதி வாட்ஸ் அப் தனது 8 வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு, ஸ்டேட்டஸ் வைப்பதற்கான ஒரு புதிய அப்டேட் ஒன்றை கொண்டு வர உள்ளது.
இதன் மூலம், புகைப்படம், ஜிஃப், வீடியோ ஆகியவற்றை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைக்க முடியும்.
தற்போது வரை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக டெக்ஸ்ட் மட்டுமே வைக்க முடியும். முதற்கட்டமாக இந்த புதிய வசதி ஐரோப்பாவில் அறிமுகமாகியுள்ளது என இதன் முதன்மை செயல் அதிகாரி ஜன் கவும் கூறியுள்ளார்.
வருகிற 24 ஆம் திகதி இந்த அப்டேட் அறிமுகமாகவுள்ளது.