Samsung Galaxy S8, S8 Plus கைப்பேசிகளின் விலை எவ்வளவு தெரியுமா?

9 பங்குனி 2017 வியாழன் 09:29 | பார்வைகள் : 11715
சாம்சுங் நிறுவனமானது Samsung Galaxy S8, S8 Plus ஆகிய இரு புதிய கைப்பேசிகளை வடிவமைத்துள்ளது.
இக் கைப்பேசிகளை இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கணவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் இவற்றின் விலைகள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி Samsung Galaxy S8 கைப்பேசியானது 799 யூரோக்கள் ஆகவும், S8 Plus ஆனது 899 யூரோக்கள் ஆகவும் காணப்படுகின்றது.
மார்ச் மாதம் 29ம் திகதி அறிமுகப்படுத்தப்படுகின்ற போதிலும், ஏப்ரல் மாதத்திலிருந்தே விற்பனைக்கு வரவுள்ளது.
அத்துடன் முதன் முறையாக ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வரவுள்ளதுடன், ஏப்ரல் மாதம் 21ம் திகதி உலக அளவில் அறிமுகமாகவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025