சரியான Password எப்படி இருக்கவேண்டும் தெரியுமா?
21 சித்திரை 2018 சனி 05:18 | பார்வைகள் : 12674
இணையவெளியில் பல்வேறு கணக்குகள் வைத்திருக்கிறோம்; கடவுச்சொற்களைப் பயன்படுத்தி அன்றாடம் அவற்றுள் நுழைந்து வெளியேறுகிறோம்.
எங்கோ, எவரின் கணக்கோ ஊடுருவப்பட்டது என்று தெரிந்ததும், அவசர அவசரமாக நமது கணக்குகளைச் சரிபார்க்கிறோம். ஆனால் கடவுச்சொற்களைச் சரியாக அமைப்பதில் நம்மில் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவதில்லை. அதற்கு முக்கிய காரணம் நம் அன்றாட பணிகளுக்கு இடையே அது நமக்கே மறந்துவிடுகிறது.
வெறும் எண்களை மட்டுமே கொண்ட கடவுச்சொற்கள் மிக ஆபத்தானவை என்கின்றனர் நிபுணர்கள்.
சரி பாதுகாப்பான கடவுச்சொல் வேண்டும். என்ன செய்யலாம்?
இதோ நிபுணர்களின் பரிந்துரை:
- கடவுச்சொல்லில் குறைந்தது 12 குறியீடுகள் இருக்கவேண்டும்.
- கடவுச்சொல்லில் எழுத்து, எண்கள், சிறப்புக் குறியீடுகள் இருக்கவேண்டும்.
- முன் பயன்படுத்திய கடவுச்சொல்லை மீண்டும் பயன்படுத்தவேண்டாம்.
- தனிப்பட்ட தகவல் – பெயர், பிறந்த தேதி போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும்.
- ஒருவர் உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கொண்டு ஊகிக்கக்கூடியதாகக் கடவுச்சொல் இருக்கக்கூடாது.
- 123, abc போன்றவற்றைத் தவிர்க்கவும்.
- ஆங்கிலத்தில் Upper case, Lower case எனும் பெரிய எழுத்து,சிறிய எழுத்து இரண்டையும் கடவுச்சொல்லில் கொண்டிருப்பது நல்லது.
- கடவுச்சொல்லுடன் ஏதாவது ஒன்றை இணைத்து அதன்மூலம் அதை நினைவில் கொள்ளலாம்.
- உதாரணமாக: தொடர்பில்லாத (ஆனால் உங்களால் நினைவில் கொள்ளமுடிந்த) ஏதாவது இரண்டுவார்த்தைகளை, ஒரு குறியீட்டைக் கொண்டு இணைத்து அதைக் கடவுச்சொல்லாகக் கொள்ளலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan