Samsung Galaxy Note 8 தொடர்பில் வெளியாகிய புதிய தகவல்!

15 ஆடி 2017 சனி 13:24 | பார்வைகள் : 10909
சம்சுங் விரைவில் வெளியிட இருக்கும் கேலக்ஸி நோட் 8 தொடர்பில் புதிய தகவல்கள் தொடர்ச்சியாக இணையத்தில் கசிந்து வருகிறது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட நோட் 7 கையடக்கதொலைபேசி வெடித்தமையால் அந்நிறுவனத்திற்கு பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டு வெளியாக இருக்கும் நோட் 8 மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 8 ஒகஸ்ட் 23 ஆம் திகதி வெளியிடப்படலாம் என்றும் செப்டம்பர் மாதளவில் சர்வதேச சந்தைகளில் விநியோகம் செய்யப்படலாம் என தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்சுங் நிறுவனம் சார்பில் உத்தியோகப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்கள் சம்சுங் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பின் கசிந்துள்ளதாக தென் கொரிய தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.